மழையும் விடுப்பும் ....

நிசப்தமான
அதிகாலை ...
இடியும்
மின்னலும்
சட்டென .....
தெருவெங்கும்
வெள்ளம் ....
தடைபட்ட
மின்சாரத்தை
நொந்து கொண்டு
அடுக்களையில்
அவள் .....
கப்பல்
செய்யும்
ஆவலில்
பழைய
நோட்டு புத்தகத்தை
தேடிய
குழந்தை...

வந்தது
மின்சாரமும்
பெருமூச்சும் ....

தொலைக்காட்சியில்
அண்மைசெய்தி
" மழைக்கு
இன்று
பள்ளிகள்
விடுமுறை "





எழுதியவர் : வீ .ஆர் .கி (12-Oct-11, 10:25 pm)
பார்வை : 349

மேலே