தெளிந்தது காதல் பைத்தியம் -சகி

தெளிந்துவிட்டேன் உன் மீது
நான் கொண்ட
காதல் பைத்தியம்
தெளிந்து விட்டது....

உன் அலட்சிய வார்த்தைகள்...

உன் உண்மையில்லா காதல்...

அக்கறை இல்லா இல்லற வாழ்க்கை....

என் வலிகளை
உணராத உன் இதயம்...

என் காதலின்
ஆழத்தை அறிந்தும்
செய்த நம்பிக்கை துரோகம்....

எனக்கான காதல் உன்னிடம் இல்லை....

இனி என் வாழ்விலும்
உன் பொய்யான
வார்த்தைகளுக்கு இடமில்லை...

செய்த சத்தியமே
பொய்யாக போனது...

ஒரு முறை இழந்த
நம்பிக்கை மீண்டும்
உயிர் பெறாது....

எழுதியவர் : சகி (26-Apr-23, 9:23 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 465

மேலே