சுக்கு மிளகு

சுக்கு, மிளகு எங்க?
@@@@@@
அஞ்சறைப் பெட்டில பாருங்க பாட்டி.
@@@@@
போடி கூருகெட்டவளே. சுக்கும் மிளகும் அஞ்சறைப் பெட்டில வச்சிருக்கிறோம் இல்லடி. என்னோட பேரன் பேத்தி பேருங்க.
@@@@@
என்னது உங்க பேரன் பேத்தி பேருங்களா?
@@@@@@@
ஆமாண்டி. உலகத் தமிழர்களே அவுங்க பிள்ளைகளுக்கு இந்திப் பேருங்கள வச்சுப் பெருமைப்படற போது. நாங்க மட்டும் இளிச்சவாயர்களா. பையன் பேரு 'சுக்'கு. இது இந்திப் பேரு. போயிட்டாப் போகுதுன்னு பேத்திக்கு 'மிளகு'னு தமிழ்ப் பேரை வச்சுட்டோம். யாராவது கேட்டா 'மிளகு' இந்திப் பேருனு சொல்லிட்டா 'சுவீட்டு நேமு' ஆகிடும்டி.
@@@@@@@
பரவாயில்லை பாட்டி. உங்களுக்கு கொஞ்சம் தமிழ்ப் பற்று இருக்குது.
####################################
Sukh = Wealthy, Happy
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (27-Apr-23, 11:57 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 100

மேலே