உன்னுடன் மனதுக்குள் போராட்டம் 555

***உன்னுடன் மனதுக்குள் போராட்டம் 555 ***
என்னழகே...
உன்னை கண்டதும்
எனக்கு பிடித்தது...
போக போக
உன்னால் எனக்கு...
பித்து பிடிக்கும்
என்று தெரியவில்லை...
நான் விதைத்த
எத்தனையோ பூ விதைகள்...
விருச்சமாய் வளர்ந்து
பூத்து குலுங்குது நந்தவனமாய்...
நான் முதல்முறை
உனக்குள் விதைத்த...
காதல் விதை
இன்னும் வளரவேயில்லை...
இரும்பாகத்தான்
இருந்தது என் இதயம்...
உன் காந்தவிழி பார்வையால்
உன் இதயத்தோடு ஒட்டிக்கொண்டது...
சப்தமின்றி முத்தம்
கொடுக்க கற்றுக்கொண்டேன்...
உன்னை என்
மனதுக்குள் நினைத்து...
காலமும் வயதும்
கடந்து சென்றாலும்...
என் மனதுக்கு
என்றும் வயதாகாது...
உன்னை
நான் காதலிப்பதற்கு.....
***முதல்பூ.பெ.மணி.....***