ஏமாற்றுச் செயல்---வெண்பா---
ஏமாற்றுச் செயல் :
உதவிசெய்து வாழ்வில் உயர்ந்துநில் அன்றி
உதவிசெய்ய இன்னலை ஊட்டல் - கதமேற்றி
உள்ளக் களிநீக்கும் உப்புநிறை ஊணாகும்
கள்ளமனம் கோறல் கடன்.
இன்னல் - துன்பம்
ஊட்டல் - கொடுத்தல்
கதம் - கோபம்
களி - மகிழ்ச்சி
ஊண் - உணவு
கள்ளமனம் - ஏமாற்றும் மனம்
கோறல் - கொல்லுதல்
கடன் - கடமை