வாழ்த்துக நிறைந்த மனதுடன்

மழலை ஒன்று மலைப்புடன்
பார்க்குது பரந்த மைதானத்தை !
வியந்து நோக்கும் இவளுக்கு
விளையாட துடிக்குது மனமும் !
வெட்டவெளி தூண்டுது ஆவலை
விட்டகல மனமோ வரவில்லை!
எதிர்கால கிரிக்கெட் வீரராகிட
இன்றே தயாராகும் குழந்தை !
விசித்திரமானது அதன் பார்வைக்கு
பரிச்சயமானது தொலைக்காட்சி கண்டு !
திட்டமிடுது நுணுக்கங்கள் அறிந்திட !
வட்டமிடுது விரிந்த விழிகளும் !
ஈட்டிட நினைக்குது உள்ளம்
காட்டிட தோன்றுது திறனை !
பெற்றிடவே பெயருடன் புகழும்
கற்றிட தூண்டுகிறது நிலையும் !
ஈர்க்குது மழலையை கிரிக்கெட்
ஊட்டுது அறிவுடன் ஆற்றலை !
வாழ்த்துக நிறைந்த மனதுடன்
போற்றுக காணும் நெஞ்சங்கள் !
பழனி குமார்
05.05.2023