வாழ்ந்திடுக, என்றும் மாறாது
தாயிற் சிறந்ததொரு
கோவிலில்லை !
தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை !
அறிந்திட வேண்டும்
வளரும் தலைமுறை !
புரிந்திட வேண்டும்
வரிகளின் பொருளை !
ஈடில்லா முதல் வரியும்
இணையில்லா இரண்டும்
நல்வாழ்வு வாழ்ந்திட
என்றென்றும் பின்பற்ற !
பண்புடன் பாசத்தை
அன்பான தாய் ஊட்ட !
ஒழுக்கத்தை ஆற்றலை
அறிவூட்டும் தந்தை காட்ட !
தவறாதே தடம் மாறாதே
தடுமாற்றம் நீ அடையாதே !
வழிமாறி சென்றவர் யாரும்
வாழ்வில் உயர்ந்தது இல்லை !
விழுந்ததும் யோசிப்பவர்
எழுவதற்கு யாசிப்பர் !
பெற்றவரின்றி வேறிலர்
மற்றவரெலாம் மாறிடுவர் !
போற்றிடுக தாய் தந்தையை
நடைபோடுக அவர்தம் வழியில்
வாழ்ந்திடுக, என்றும் மாறாது
உயர்ந்திடுக, என்றும் தவறாது !
பழனி குமார்
02.05.2023