ரேகைகள் காட்டுது பாதையை

கருவாசம் முடிந்து புவிவாசம்
அறிந்திட வெளிவந்த சிசு !
கருவறை வளர்த்த பறவை
சிறகுகள் முளைத்த மழலை !

மூடிய விழிகளுடன் யோசிக்குது
உலகை உள்ளத்தில் வாசிக்குது !
தன்னிலை உணர்ந்திட துடிக்குது
தனிமை தேவையென நினைக்குது !

பிறக்கும் குழந்தைகள் நிலையிது
உறங்கும் நேரத்திலும் சிந்திக்குது !
பழமை ஒதுக்கிடும் சமுதாயமிது
புதுமையை புகுத்திட விரும்புது !

பாதகங்கள் நிறைந்த பூமியில்
சாகசங்கள் புரிந்திட நினைத்து
சாதிக்க நடைபோடும் பாதத்தில்
ரேகைகள் காட்டுது பாதையை !

வருங்காலம் தழைத்து ஓங்கிட
எதிர்காலம் சிறந்து விளங்கிட
வளர்கின்ற சிறுசுகள் சிந்திக்க
நற்சிந்தனை ஊட்டி வளர்த்திடுக !

பழனி குமார்
07.05.2023

எழுதியவர் : பழனி குமார் (7-May-23, 10:06 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 553

மேலே