நிறைவு தரும் காதல்

நிறைவு தரும் காதல்
**************************
ஆதியும் அந்தமும்
தெரியாத
சாதியும் சங்கமும்
கிடையாத
ஏதும் அறியாத காதல் !
கண்டதும் தோன்றுவது
இதயத்தால் ஈர்ப்பது
தொடங்கிடும் காதல் !
காமத்தால் வருவது
வேகத்தால் எழுவது
பகுதிநேர காதல் !
இளமையின் தாபம்
உணர்ச்சியின் உந்துதல்
உயிரில்லா காதல் !
தடைகளை உடைப்பது
தகுதிகளை தளர்த்துவது
உண்மை காதல் !
வீரியமுடன் விழுவது
தேவைக்காக சேர்வது
நிலையிலா காதல் !
விளைவுகளை அறிந்து
விளையாட்டாக இணைவது
விபரீதக் காதல் !
உறுதியான உள்ளங்கள்
இறுதிவரை இருப்பது
உயிருள்ள காதல் !
காதலிக்கும் நேரங்களில்
கட்டுப்பாடுகளை மீறாத
கண்ணிய காதல் !
பேச்சுக்கு இடம்தராது
ஏச்சுக்கு கோபப்படாது
தொடர்கின்ற காதல் !
குற்றம் குறை கூறவில்லை
காதலிக்கும் உள்ளங்களே
பெற்றவரிடம் கூறுங்கள் !
இருவீட்டார் இசைவுடன்
மணமேடை காண்பது
சாதிக்கும் காதல் !
உற்றவரும் மற்றவரும்
உளமாற வாழ்த்திடும்
நிறைவுதரும் காதல் !
பழனி குமார்
06.05.2023