காதல்..

அழகிய நிலவில் ஒரு உலா
நீயும் நானும்
ஒன்றாக பயணிப்போம்..

காதல் வானில்
காதலர்கள் கனவுகளுடன்
வலம் வருகிறார்கள்
உலகெங்கும் சுற்றி..

நீநான் என
பிரிவுகள் இல்லாமல்
மெய்யோடு மெய்
சேர்த்து வருகிறர்களே..

காதலில் மிதந்து
வரும் இவர்களுக்கு
காலம் கற்றுத்தரும்
பாடம் என்னவோ..

காத்திருக்கிறார்கள் இவர்கள்
வாழ்க்கையில் காயத்தையும்
கஷ்டங்களை எதிர்கொள்ள
துணிவுடன் இருவர்..

எழுதியவர் : (7-May-23, 7:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 70

சிறந்த கவிதைகள்

மேலே