கண்ணாடி முன்

கண்ணாடி முன்

கருமை நிற
காடு
வளைந்தும் நெளிந்தும்
படர்ந்தும் தான்
இருக்கிறது

ஒற்றை பாதையொன்று
வகிடு போல
காட்டை பிரித்து
வெளி வர

பாதையின்
ஓரமெங்கும் மெல்லியதாய்
தெரிந்த
வெள்ளை நிற
முட்கள்


சாயம் பூசியே
ஆக வேண்டும்

பெருமூச்சுடன்
முடிவெடுத்தாள்
பெண் ஒருத்தி

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (11-May-23, 3:32 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kannadi mun
பார்வை : 54

மேலே