அடக்கமான பெண்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
எதுகை மோனைகளுடன் இலக்கண அமைதிகளுடன் அமைந்த குறளாகும்..
Need to know is enough
தேவையானதை மட்டும் பேசு
வள்ளுவர் உலக மக்களுக்குச் சொன்ன ஆழ்ந்த அருமையான
கருத்தினை உள்ளடக்கியக் குறளுள் இதுவும் ஒன்றாகும்..
எந்த இடமானாலும் சரி நாம் ஒருவருடன் பேசும்போது சொல்லுகின்ற சொல்லானது தேவையான சொல்லை மட்டும் சொன்னாலே போதும். தேவை யில்லாத உதவாத சொற்களை
பேசிச் சொல்லி குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்.
உதாரணம்
இந்தப் பெண் மறவர்களைப்போல சினிமா பீச்சின்னு காலி பயல்களோடு சுற்றுபவள் இல்லை நல்ல பெண் என்று சொல்வது
எப்படியிருக்கிறது ....இவள் அடக்கமான பெண் என்பது எப்படி யிருக்கிறது
யாருக்கும் பாதகம் ஏற்படா வண்ணம் நாம் பேசும் பேச்சு அமைய வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது..
உதாரணத்திறகு ஒருவரிடம் பழுத்த மாம்பழம் வாங்கிவர சொல்ல நேர்ந்தால் அவரிடம் நல்ல பழுத்த மாம்பழம் வாங்கி வா என்று சொன்னாலே போதும். அதை விடுத்து பச்சை மாங்காயை கடைக்காரன் தலையில கட்டிடுவான் ஏமாந்து வாங்கி விடாதே மஞ்சள் நிறமாகப் பார்த்து பொறுக்கிப் பார்த்து பழுத்ததாக வாங்கிவா என்று நீட்டி பேசுதல்வேண்டாமாம்.
உதவி செய்ய வந்தவனை எமார்ந்து விடாதே என்று அனாவசி
யமாகக் மடையனாகப் பாவித்து கேவலப் படுத்துதல் எரிச்சலூட்டும்
அல்லவா, இதனால் மனச் சஞ்சலம் ஏற்படும். பகைமை ஏற்படும்.
ஆகையால் தேவையானதை மட்டும் சொல்ல வேண்டும் என்பதாம்.