வலிகளை மறக்க கற்று கொடடி 555
***வலிகளை மறக்க கற்று கொடடி 555 ***
ப்ரியமானவளே...
மண்ணுக்குள் இருந்து முட்டி
முளைத்து துளிர்விடும் விதை போல...
என் மனதுக்குள் முட்டி மோதி
காதல் உணர்வு முளைத்தது...
பூத்து குலுங்கும்
பூ மரம் போல்...
நீயும் நானும் கண்ணுக்கு தெரியாத
காதல் உணர்வில் திளைத்தோம்...
காதலுக்கு ஜாதி மதம்
தடைகள் வரலாம்...
காதல் கொண்ட நீயே
தடையாக வருவது ஏனடி...
என் காதலை நீ
ஏற்று கொண்ட போது...
நானும் என் வருமானமும்
தெரியவில்லையா...
உன் வீட்டில்
பார்த்த வரனுக்கு...
உனக்கு சம்மதம் என்பதில்
எனக்கும் சந்தோசம்தான்...
உன்
ஆசைகள் நிறைவேற...
உன்னைப்போல் நானும்
புன்னகைக்க ஆசைதான்...
உதடுகள் புன்னகைத்தாலும்
வலிகளை கண்கள் காட்டிவிடுகிறது...
எனக்காக
ஒன்று செய்...
வலிகளை மறந்து வாழும்
வித்தையை மட்டும்...
சொல்லி
கொடுத்து போ எனக்கு...
போதும்
உன் நினைவாக.....
***முதல்பூ.பெ.மணி.....***