வேண்டாத காகிதமாய் என்னை எறிந்தாய் 555
![](https://eluthu.com/images/loading.gif)
***வேண்டாத காகிதமாய் என்னை எறிந்தாய் 555 ***
ப்ரியமானவளே...
முதல் சந்திப்பில்
உன்னை பிடித்து போக...
நீயும் உன் பேரன்பை
எனக்கு கொடுத்தாய்...
என் உணர்வில் என்னுள்
பாதியாக நீயும் கலந்தாய்...
காதல் பறவையாக சிறகடிக்க
ஆசையின் கொண்டேன்...
மெல்லிய உன்
கரம் கோர்த்து...
பார்க்காத உறவை
நீ உயிராக நேசித்தாய்...
என்னை காகிதமாய்
தூக்கி எறிந்தாய்...
உன்னுடன்
பயணித்த நான்...
ஓர் மூலையில்
வேண்டாத காகிதமாய்...
காகிதத்திற்கும் மனம் உண்டு
என்பதை மறந்துவிட்டாய் நீ...
உன்னுடன் பயணிக்க
நினைத்த என்னை...
உன் பயணத்தில்
பாதியிலேயே இறக்கிவிட்டாய்...
பாதியில் பயணம்
வலித்தது என் மனம்...
அந்த நாள் என்னை கொஞ்சகொஞ்சமாய்
எரிந்துகொண்டு இருக்கிறது...
கடலின் மண் அரிப்பை போல
ஒருநாள் முழுவதும் கரையும்...
என் இதயம் என்றும்
உன் பெயரையே உச்சரிக்கும்...
என் உயிரானவளே.....
***முதல்பூ.பெ.மணி.....***