என் உயிரில் கலந்த உறவே 555

***என் உயிரில் கலந்த உறவே 555 ***


உயிரானவளே...


கண்களை மூடி
நான் உறங்க நினைத்தால்...

கண்முன்னே வருவது
உன் முகம் தானடி...

உடலுக்குள் இருக்கும்
கோடி கோடி செல்களில்...

நீ மட்டுமே
நிறைந்திருக்கிறாய் கண்ணே...

மனதுக்குள் உன் நி
னைவுகள்
சுகமாய் இருப்பதால்...

உறக்கமும்
எனக்கு வருவதில்லை...

நீ சிரிக்கும் போது
மார்கழி குளிர்...

நீ என்னை முறைக்கும் போது
சித்திரை அனல்...

நான் உன் கரம்
கோர்க்கும் வேளையில்...

எரிமலை ஒன்று சிதறுதடி
உன் மார்பில் இடம் கேட்டு...

காற்றோடு கவிபாடும்
உன் காதுமடல்...

பூமியில் தாளமிடும்
உன் கால் கொலுசு...

என் உயிரின்
சுவாசமானவளே...

என் உடலுக்கு உயிர்
கொடுப்பவளும் நீதான்...

என் உயிரானவளே.....***முதல்பூ.பெ.ம
ணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (15-May-23, 4:50 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 273

மேலே