“இம்போசிசன்”

“இம்போசிசன்”

மூடியிருந்த குடிசை
கதவு
ஏக்கமாய் பார்த்த
கண்கள்
மூக்கில் எட்டி
பார்த்த வெள்ளை
சளியை
புறங்கையால்
ஒட்டி இழுத்தவன்

அவிழ்ந்து போன
கால் சராய்
அவசரமாய் இழுத்து
இடுப்பு கயிற்றில்
சொருகி விட்டு

அம்மா வருவதற்குள்
ஆசிரியர் கொடுத்த
“இம்போசிசனை”
எழுதி விடலாம்
என்று சிலேட்டை
எடுத்து “பசி”
என்று பத்து முறை
எழுதினான்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-May-23, 4:27 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 18

மேலே