ஆதவன் விடைபெறுமுன் நீவந்தால் நான்மகிழ்வேன்

குறையில்லா காதல் மனமும் குவிந்தயிதழ்ப் புன்சிரிப்பும்
பிறைநிலா நெற்றியில் கலைந்தாடும் பூங்குழல் சுருளுடன்
உறைவாள் கூர்மையில் பார்க்கும் ஓரவிழிப் பார்வையில்
மறையும் ஆதவன் விடைபெறுமுன் நீவந்தால் நான்மகிழ்வேன்