அடி பெண்ணே..
மீண்டும் மீண்டும்
ஏதோ ஒரு விஷயத்தில்
என்னை பிரமிக்க
செய்கிறாயே..
கண்ணைக் கட்டிச்
சென்றாலும் நீ
என் அருகில்
வருகையில் என்
யாக்கை முழுவதும் வியர்வை
ஒழுங்குகிறது..
ரசாயனம் கலந்த
ரகசியமாடி நீ
என்னை ஏனோ
இப்படி ரசிக்க
வைக்கிறாயடி..
அடி மின்னும்
என் ரதியே
மறுமுறை மறுமுறை
உன்னிடமே வருகிறேன்
மயக்கத்திலே..
பரமகுரு பச்சையப்பன்