தஹி - நஹி

ஸ்ரீமுருகன் துணை
அன்புடையீர்,
நிகழும் சோபகிருது ஆண்டு வைகாசி மாதம் 17 ஆம் தேதி (31-05-2023) புதன்கிழமை 06,30 மணி அளவில் நடைபெறும் எங்கள் இரட்டைப் பெண் குழந்தைகளின் பெயர் சூட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து எங்கள் செல்வங்களை வாழ்த்த தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: தற்காலத் தமிழர்களின் வழக்கப்படி எங்கள் குழந்தைகளுக்கு சூட்டப்படும் இந்திப் பெயர்களைப் பெருமையுடன் கீழே பார்க்கவும்:

தஹி (Dahi)
நஹி (Nahi)
நிகழிடம்: அன்பு கல்யாண மஹால், சென்னை – 600 056.
விருந்தோம்பல்: மாலை 07.00 மணியிலிருந்து. குழந்தைகளை “தஹி, நஹி சிந்தாபாத்” என்று கூறி வாழ்த்தவும்.

தங்கள் வரவை அன்புடன் எதிர்பார்க்கும்
ஸ்ரீமதி ஸ்ரீமதன்

எழுதியவர் : மலர் (20-May-23, 7:35 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 29

சிறந்த கவிதைகள்

மேலே