புறா விடு தூது

புதிராக அவள் நினைவு என் நெஞ்சை குடைந்தெடுக்க
மதி போன்ற பெண்ணுக்கு கைகள் மடல் ஒன்று தீட்டி
அதிகாலை பொழுதிலே புறா விடு தூது அனுப்பினேன்
இதிகாசங்கள் கூறும் பேரழகிகளை ஒப்ப பெண் ஒருத்தி
பதியிலே கொலு வீற்றிருப்பாள் அவளிடம் கொடு என்றேன்
எதிர்பார்த்து அவள் பதிலை யன்னல் கதி என கிடந்தேன்
குதித்தெழுந்த குழந்தை மனம் குமிறிட தொடங்கியது
பதிலாக மடல் அல்ல என் கண்ணீர் மட்டுமே வந்தது

எழுதியவர் : நிழல்தாசன் (25-May-23, 9:58 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : puraa vidu thootu
பார்வை : 141

மேலே