பிரிவுகள்..
கொண்டாடி தீர்த்த
நாளெல்லாம் நினைத்து
அழுது தீர்க்கிறேன்
இப்போது..
மரணம் வந்து
அழைத்துச் செல்லும்
போது வலிக்காத உயிர்
உன் பிரிவில் வலிக்குதடி..
அன்புகளை கூட்டி
உனக்கு ஆராதனை செய்தேன்
அறுத்துச் சென்றாயே
அன்பை மட்டுமல்ல..
காயங்களை கூட
கண்ணீர் விட்டுதான்
ஆற்றுகிறேன்
நிலைமை கொடுமையே..
பரமகுரு பச்சையப்பன்