என்னை நீ மறந்துவிட்டாய் 555
***என்னை நீ மறந்துவிட்டாய் 555 ***
உயிரானவளே...
தொலைதூர பயணத்தில் தொடும்
தூரத்தில் நீ இருந்தாய்...
இன்று தொட்டுவிடா
தூரத்தில் நீ...
புத்தாடையில் சேரும் மஞ்சள் போல
என்னுள் நீ சேர்ந்தாய்...
மறக்க முடியாத உயிராக
நீ என்னுள் ஆனாய்...
இன்று தனிமையில்
என்னை தவிக்க விட்டு...
கண்ணாடியில்
ஒட்டாத பாதரசம் போல...
என்னை
நீ மறந்துவிட்டாய்...
விதையின்றி நீரின்றி என்னுள்
வளர்ந்த காதல் மலர்...
கத்தரிகொண்டு நீ
வேரினை அறுத்தது ஏனோ...
உடலுக்கு தெரியாமல்
உயிர் பிரியும் உறங்கும் நேரத்தில்...
என் உயிரில் இருந்து
உன் நினைவுகள்...
என்றும்
பிரிக்க முடியாதவை...
துளிர்விட்ட
என் வாழ்வில்...
என் உயிரை நீ
வேரறுத்து சென்றது ஏனோ...
மீண்டும் என்னை சேர்வாயா
என்னுயிரே.....
***முதல்பூ.பெ.மணி.....***