குறுநகைபுரி கின்றாய் குளிர்ந்த கண்களிலே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கருவிளங்கனி தேமா புளிமா கூவிளங்காய்)

திருநுதற்றனிற் காட்டுந் தெளிவாய்ப் பைங்கொடியே;
குறுநகைபுரி கின்றாய் குளிர்ந்த கண்களிலே!
கருங்குழலினிற் காணுங் களப மின்பமென
வருமிதமெனக் காண்பேன் வரமாய் மாலையிலே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-23, 7:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே