தோல்வியை வெற்றியாக்குவோம்

தோல்வியை வெற்றியாக்குவோம்

தோல்வியில் வருவது பெரும் துயர்
துயரில் வருவது பெரும் வேதனை
வேதனையில் வருவது பெரும் தாழ்வு
தாழ்வில் வருவது பெரும் மனத் தகிப்பு
தகிப்பில் வருவது உயரிய வைராக்கியம்
வைராக்கியதில் வருவது திடமான தைரியம்
தைரியத்தில் வருவது சிந்தையில் தெளிவு
தெளிவினில் வருவது ஒளி விடும் அறிவு
அறிவினில் வருவது உன்னத சிந்தனை
சிந்தனையில் வருவது முன்னேறும் வழிகள்
முன்னேற்ற பாதையில் அடி வைத்து நடக்கையில்
அவ்வடிகளில் தெரிவது வெற்றியின் இலக்கு
இலக்கை அடைந்து வெற்றி கண்டு பெருமை கொள்வோம்

எழுதியவர் : கே என் ராம் (27-May-23, 7:11 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 17

மேலே