நீங்கிய நினைவுகள்
இது நிலவு இல்லா வானம்.
முகவரி மறந்து அலையும் மேகம்.
நீலம் பூத்து விஷமாகிப்போன மனம்.
வெற்று மொழி பேசித் திரியும் தென்றல்.
மூங்கில் சங்கீதம் உணரா உணர்ச்சிகள்.
உண்மை மறைந்த உறங்கா நினைவுகள்.
முகம் மறந்த உன் நினைவுச்சின்னம்.