தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் - கட்டளைக்கலித்துறை

தினமும் மனதினுள் துன்பம் பெருகிட மாநிலத்தில்
வனப்பில் மதுவது பொங்கி பெருகி தமிழர்களோ
அனுதினம் போதையில் சிக்கி துவண்டு அறிவிழந்து
தனித்தத் திறமை இழந்து உலகிலே நிற்கிறானே

தமிழகம் ஆள்வோர் மதுவை திறம்பட விற்றிடவே
தமிழ்நா டுமாநில வாணிபம் என்ற கழகத்தையும்
அமைத்த இராமப் பிறையன் வழியில் இதுவரையில்
அமிழ்தமாய் விற்பது தர்மமோ சொல்லுவீர் தேவர்களே

மணந்தவள் மக்கள் தமதுபெற் றோருடன் சுற்றதாருள்
பிணக்கை கொடுத்து மகிழ்வைக் கெடுக்கும் மதுவேண்டுமோ
குணமிழந் துக்குடிக் கும்நிலை வந்தால் துயர்மிகுமே
பணத்தைக் கொடுத்து உடலுள் பலநோய் நுழைக்கிறாயே

அரசும் அதனை அறிந்தும் அறமாய் பிடித்தபடி
திரமாய் அகற்றா திறத்தில் பலவகைப் பொய்யுரைத்து
அரசதின் ஊழியர் ஊதியம் தந்திட காரணியாம்
கருணையே இல்லா வகையில் அரசின் நனிகருத்தே

மக்களே மக்களே அக்கறை அற்ற அரசுகளால்
குக்கலை காட்டிலும் உங்களை கொண்டார் மனதினுளே
முக்கலும் விக்கலும் கொண்டே உயிரும் பிரிந்தாலுமே
கக்கவே வைத்து பணத்தை பிடுக்கும் அரசதுமே
— நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Jun-23, 10:12 am)
பார்வை : 32

மேலே