கலைவிழிகள் காதல் பேச

கலைவிழி கள்காதல் பேச கரியமென் பூங்கூந்தலோ
அலைபோல காற்றில் அசைந்தாடி மூங்கில்மென் தோள்புரள
விலையிலா புன்னகை முத்தை இதழ்கள்சிந் தும்போதினில்
தலைக்கா விரிபோல் தமிழ்க்கவி பாயுதே நெஞ்சினிலே

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jun-23, 5:05 pm)
பார்வை : 125

மேலே