உன் விழிகளும் ஏனடி ஊடல் கொள்கிறது 555
***உன் விழிகளும் ஏனடி ஊடல் கொள்கிறது 555 ***
ப்ரியமானவளே...
சின்ன சின்ன சிணுங்கல்களுக்கெல்லாம்
என்னோடு ஊடல் கொள்கிறாய்...
இதழ்கள் திறந்து பேசாமல்
மௌன விரதம் ஏனடி...
என்னோடு ஊடல் கொண்டு
நீ மௌனம்கொள்...
முதலில்
உன் விழிகளை மூடிகொள்...
உன் இதழ்களைவிட
உன் விழிகள்தான்...
என்னோடு ஆயிரம் வார்த்தைகள்
பேசி ஊடல்கொள்கிறது...
நினைவுகள் மட்டுமல்ல
என் நிழலும் உன்னை சுவாசிக்குதடி...
மெல்லிய புன்னகையில்
தலைசாய்த்து...
நீ எடுத்துக்கொண்ட புகைப்படம்
நான் பார்க்கும் போதெல்லாம்...
மெல்லிய உன் இதழ்களை
ருசிக்க மனம் ஏங்குதடி...
சிறிது நேரம் உன்
ஊடலை விட்டுவிட்டு...
உன் தேன் இதழ்களை
கொஞ்சம் கொடுத்து செல்லடி...
காதல் பாதையில் வழி
துணையாக நீ வர வேண்டாம்...
என் வாழ்ககை
துணையாக நீ வரவேண்டும்.....
***முதல்பூ.பெ.மணி.....***