புல்லுக்கட்டு சுமந்துகிட்டு ஒத்தையிலே போறவளே

புல்லுக்கட்டு சுமந்துகிட்டு ஒத்தையிலே போறவளே
=============================================

மல்லுக்கட்டும் மாட்டோடு
மாந்தோப்போரோம் ஒத்தையிலே
புல்லுக்கட்டு சுமந்துகிட்டு
புதுசாகப் போறவளே

மல்லுவேட்டி கட்டிவரும்
மாமனும் கூடவாரேன்
தில்லாக தூக்கிச்சென்று
தாலியையும் போடப்போரேன்

கல்லாக நீயிருந்தாலும்
கற்சிலையடி நீயெனக்கு
பொல்லாதவளாக நீயானுலும்
பொண்டாட்டியாகும் வரமடிநீ

இல்லாதாவனென ஒதுக்காதே
இல்லாளாக நீயும்வர
இல்லாத செல்வமாவும்
இல்லம் நிறைந்திடுமே

கல்லாதவனெனக் கடக்காதே
கடவுளுக்கும் நிகரானயெனை
பல்லவ மன்னனுக்கும்
பசியாயற்றிய உழவனானே

உல்லாசத்திற்கு உனையாம்
உறவாக்க நினைக்கலடி
நல்லதொழில் விவசாயம்
நலியாதிருக்கவே இணைவோமடி

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Jun-23, 9:53 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 37

மேலே