மனம் குளிர்ந்ததே

மனம் குளிர்ந்ததே
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
சித்திரைத் திங்களில்
சந்தித்த சித்திரமே/
நித்திரைத் தொலைத்தேனே
நித்தம் யுனைதரிசிக்க/

வைகரைக் கதிரவனாக
வைகாசி மாதத்தில்/
முகம் காட்டி
முந்தானையில் முடிச்சவளே/

ஆனி வெயிலாக
ஆங்காரத் திமிருலே/
இனிய மடலெழுதி
இல்வாழ்வை முறித்தவளே/

ஆடிக் காற்றில்
அரும்பாக வீழ்வேனென/
கொடியவளே காத்திருந்தாயோ
கொக்காக ஒற்றைக்காலிலே/

ஆவணியில் அவதாரமெடுத்தே
ஆசை நாயகனைவிட/
புரட்டாசியில் சிறந்தவனானேன்
புதியபாதையில் பயணித்தே/

ஐப்பசியில் கடன்வாங்கிய
ஐவர்யுன் வாசில்/
தப்பானா(தகாத) வார்த்தையில்
தரங்கெட்டு பேசிடவே/

கார்த்திகைத் தீபமாக
கரைவேட்டியில் நானும்வர/
மார்படித்து புலம்பினானே
மானங்கெட்டயுன் அப்பனுமே/

மார்கழிக் கண்ணனாக
மாப்பிள்ளை இவனிருக்க/
பரதேசி நாயோடு
பாதைமாறி வந்தவளேயென/

தைக் கரும்பெடுத்து
உதையும் கொடுக்க/
தைதையென நீயும்
கதகளியாடியக் காட்சிதனை/

மாசித்தேரோட்டமாக ரசித்து
மச்சினியோ வர்னிக்க/
பங்குனி வெயிலிலும்
பனிபோலே குளிர்ந்ததே/

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Jun-23, 9:52 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 29

மேலே