நேரிலே நீவாரா நாளிலே

ஒன்றில் மூன்று ஒற்றிலா வெண்பா
***************************************
நீரிலா தாகுமா நீளவே ரோடுமா
காரிலா ஊரழ காகுமா - ஏரிலா
தேயுழ வாகியே தேயுமா நாளைய
ஆயுவா யாகுதே ஆறு
*
நீரிலா தாகுமா நீளவே ரோடுமா
காரிலா ஊரழ காகுமா - ஏரியொடு
ஆறு குளமொடு ஆழி கிணறோடை
நூறு பயனுடைய தே
*
நீரிலா தாகுமா நீளவே ரோடுமா
காரிலா ஊரழ காகுமா - நேரிழையே
நேரிலே நீவரா நாளினை நேரிட
போரிட லாகுதே போ
*
*முன்னரே அடிகள் ஒரு பொருளும்
பின்னர் அடிகள் வெவ்வேறு பொருளும் கொண்டதாக..
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Jun-23, 2:00 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 85

மேலே