உன் இடைநின்ற நான்

என் குறைகளை ஒவ்வொன்றாய்
களைந்து ‌கொண்டிருக்கிறேன்.
காண்போரிடமெல்லாம்
சற்றும்கூட பிடிக்காமல்தான் குறைபடுத்திப்போகிறாய்
என அறியாமல்.‌
என்‌ குறைகள்
ஒரு தொலைதூர கரும்புள்ளியாகி
மறையும் முன்பாவது
எனை வந்து அணைத்துவிடு.
எது உன் வழக்கம் ?
தொலைந்தபின்னால் தேடுவதா ?
தொலைத்துவிட்டப்பின்னால் தேடுவதா ம் ?
யாரென்றுதானே கேட்கிறாய் ?
முற்றுப்புள்ளிக்கு முன்னால்
முடிக்கப்படாத வாசகம்.
முற்றுப்புள்ளிக்குப் பின்னால்
எழுதப்படாத வாசகம்.

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (9-Jun-23, 2:31 am)
பார்வை : 67

மேலே