உதிர்ந்திடாத நினைவுகள்

உதிர்ந்திடாத நினைவுகள்
₩₩₩₩₩₩₩ ₩₩₩₩₩₩

வண்ணப் புன்சிரிப்பில்
கன்னக் குழிபறித்து/
திறவாத இதயகதவு
துடித்தே திறந்தது /2

அழகான யாவும்
அழகாக தெரியவில்லை /
அழகே உன்னைக்
கண்ட முதல் /4

நான் நீயானேன்
நினைவில் நீயானாய்/
கனவில் கதையானாய்
கவிதையில் வரியானாய்/6

இயல்பாய் சுலபமாக
இதயத்துள் வந்தவளே/
இல்லறத்து உறவாக
இணைவது வரமாகும்/8

வலியவே வந்து
வலி தந்தது/
வகுப்பு வாதம்
வாட்டியது சோகம்/10

எதிர்த்தக் கரங்கள்
எண்ணிக்கை ஆயிரம்/
ஏற்கவில்லை ஒருகரமும்
ஏணிந்தப் பேதம்/12

காதலே காதலை
காக்குமேன நானிருந்தேன்/
கைவிட்டது சாதிவெறிக்
கும்பலின் சதுரங்கத்தில்/14

தூரிகைக் கிடைத்தும்
ஓவியம் வடிக்க/
இயலாதச் சிற்பியாய்
தவிக்கிறேன் நினைவுகளால்/16

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (13-Jun-23, 6:25 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 144

மேலே