சில நிமிடம் எனக்காக காத்திரு 555

***சில நிமிடம் எனக்காக காத்திரு 555 ***


என்னுயிரே...


தி
னம் தினம் உன்னுடன்
நித்திரையில் உரையாடுகிறேன்...

தொலைவில் நீ இருக்க
கைபேசியில் அழைத்
தேன்...

என் அழைப்புகளை
எடுக்க மறுப்பதேனோ...

நேரம் இல்லையென
காரணம் சொல்கிறாய்...

என்னோடு பேசுவதற்கு மட்டும்
உனக்கு நேரம் இல்லையா...

உன் அழைப்புக்காக காத்
திருந்து
காத்திருந்து ஏமாற்றம் அடைகிறேன்...

சில நிமிடம் எனக்காக
நீ ஒதுக்க மறுக்கிறாய்...

என் மொத்த
வாழ்க்கையையும்...

உனக்காக நான்
ஒதுக்க காத்திருக்கிறேன்...

ரு பொழுதேனும்
மறந்துவிடாதே...

என்னை தினம் தினம்
வாடவிடாதே இனி...

உனக்கும் எனக்கும் கைபேசி
அழைப்புகள் வேண்டாம்...

நாம்
கைகோர்த்து சேர்ந்திருப்போம்...

இனி என்றெ
ன்றும்
இணைபிரியாமல்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (8-Jun-23, 7:39 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 444

மேலே