மரணம் -சகி

காத்திருக்கிறேன்
மரணமே நீ என்னை
அழைத்து செல்ல
வருவாய் என்று....

எத்தனை முறை
உன்னை தொட்டு
சென்றேன்...

உனக்கும் என்னை
பிடிக்கிவில்லையோ...

வாழ்க்கையில் வலிகள்
இருக்கலாம்...

வலிகளே என்
வாழ்க்கை ஆனதால்
விரும்பவில்லை
இப்புவியில் நான்
குடியிருக்க...

மழைத்துளியில்
கலந்து மனம் வீசும்
மண் வாசனையாக
மண்ணில் மறைந்து
மடிய விரும்புகிறேன்....

உண்மை இல்லை
உரிமைஇல்லை
உறக்கம் இல்லை
உறவுகள் ஏதும்
உண்மை இல்லை....

யாருக்கும் பாரமில்லாத
உயிராக மடிய வேண்டும்...

இறைவனிடம் வேறு
ஏதும் வேண்டவில்லை....

நான் உறக்கும்
போது என் உயிரும்
நிரந்திரமாக உறங்கிட
வேண்டும்....

❤️இன்றே ❤️

எழுதியவர் : சங்கீதா (7-Jun-23, 5:27 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 1806

மேலே