சூழநினைவின்றி நான் உன் நினைவில் 555
***சூழநினைவின்றி நான் உன் நினைவில் 555 ***
உயிரானவளே...
நான்கு திசைகள் எட்டாகலாம்
வீசும் காற்றும் கூட புயலாகலாம்...
மனதுக்குள் இருக்கும் நீ என்றும்
என்னைவிட்டு போவதுமில்லை...
நான்
உன்னை மறந்துவிடுவதுமில்லை...
நீ என்னை எப்போதும்
நினைக்க வேண்டாம்...
நான் உன்னை நினைத்தே
இருப்பேன் என்றும் மறந்துவிடாதே...
மழலையின் அழுத விழிகளுக்கு
இறைவனே பொறுப்பு...
என் விழிகள் அழுதத்திற்க்கு
இறைவன் அனுப்பி வைத்த...
நீயும் உன்
காதலும்தான் பொறுப்பு...
உறங்க மறந்து
பல நாட்களாகிறது...
உழைக்காமல் மனமும்
உடலும் சோர்வாகிறது...
எனக்கு வரமாக
வந்தவளும் நீதான்...
வாழ்வை கொடுத்து பறித்து
சென்றவளும் நீதான்...
பாதையில்லாத கானகத்தில்
பயணம் தொடர்கிறேன்...
சூழ நினைவின்றி நான்
உன் நினைவில்.....
***முதல்பூ.பெ.மணி.....***