துடித்தது
பெண்ணே உன்னை கண்டதும் நெஞ்சில்
தீப்பொறியாய் காதல் பற்றியது
நெய்யாய் உந்தன் சிரிப்பு ஒழுக
காட்டுத்தீயாய் முற்றியது
மனதில் இருந்த காதலை எல்லாம்
காகிதத்தில் நான் வைத்தேன்
ஏற்றுக்கொள்வாய் என்ற எதிர்பார்ப்பில்
உன் பவள கைகளில் சேர்த்தேன்
"Interest இல்ல" என்றவள் வார்த்தைகள்
நெஞ்சை குத்தி கிழித்தது
"It's ok" என்று கூறிய என் நாக்கு
ஏமாற்றங்களை உள்ளே ஒளித்தது
முகமோ வீரமரணம் அடைவான் போல்
மகிழ்ச்சியாக நடித்தது
வெட்டி வீழ்த்தப்பட்ட இதயமோ
அவள் பெயரை சொல்லி துடித்தது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

நீ ஓர்...
கவின் சாரலன்
29-Mar-2025

போகுமிடம் வெகு...
Ashok4794
29-Mar-2025
