தனிமை

பிறை நிலா உன்னை கண்ட நாள் முதல்
நெஞ்சுடன் பேச தொடங்கினேன்
கருநாகமாய் திரிந்த நான் உன்
கண் மகுடிக்கு அடங்கினேன்
காதல் காட்சிகள் கற்பனையில் ஓட
எனக்குள் நானே சிரித்தேன்
மனதிலே மணப்பந்தல் கட்டி
திருமண தேதி குறித்தேன்
வேண்டாம் இரு சொன்ன நீ என்னை
வார்த்தைகளால் குதி கொன்றாய்
என்னை வேண்டாம் என்றவள் ஏன் என்
நெஞ்சை மட்டும் பறித்து சென்றாய்
கவலைகளை கூட சொல்ல யாரும் இல்லை
தனிமையில் இங்கு வாடுகிறேன்
நடந்தவை யாவும் கனவாய் இராதா
என்று எண்ணி கண்களை மூடுகிறேன்

எழுதியவர் : நிழல்தாசன் (3-Jun-23, 8:26 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : thanimai
பார்வை : 206

மேலே