முற்போக்கில் பிற்போக்கா

அன்று ஆடை ஏதும் அணியாது
பண்பறியாது அலைந்து திரிந்த மனிதன்
அழகின் இலக்கணம் அறியாதி ருந்தான்
காலம் மாறியது நாகரீகம் மனிதனைப்
பற்றிக்கொள்ள அலங்கார ப்ரியனாய் தன்னை
மாற்றிக்கொண்டான் அவனே 'ஆடைஅலங்காரம்',
மூடிய அங்கத்தில் அழகு கண்டான்;
இன்றோ நவீன நவயுகத்தில் அவனே
அரைகுறை ஆடையும் நிர்வாணமும்
அழகென்று சொல்லி அலைகின்றானே
இதுயென்ன நாகரீகம் வீழ்ச்சி எனலாமோ?
முற்போக்கில் இவன் காணும் பிற்போக்கா ?
புரியவில்லை புரியலை யே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Jun-23, 7:55 pm)
பார்வை : 24

மேலே