தந்தையார் யார்
ஒரு பெண் கருத்தரிக்க வித்திட்டவர் ஒரு தந்தை
ஒரு பெண்ணைத் தாயாக உயர்த்தியவர் தந்தை
தன் குழந்தையை மனதினால் நேசிப்பவர் தந்தை
தாயும் சேயும் நலமுடன் இருக்கக் காரணம் தந்தை
தாய் அரவணைப்பாள் இவர் மனதில் இணைப்பார்
பாலூட்டும் தாய், இருவரும் சோறு உண்ணத் தந்தை
தாய் குழந்தைக்கு ஒரு கடவுள், தந்தை ஒரு கோவில்
தாய்க்கு குழந்தையே முக்கியம் தந்தைக்கு இருவரும்
அன்பில் தாய் மறந்தால் அப்பா தவறாமல் கண்டிப்பார்
பள்ளிவரை தாய் சமாளிப்பாள் அப்பா கரையேற்றுவார்
சொந்த மகனும், வளர்ந்துவிட்டால் தந்தைக்குத் தோழன்
தாய் செல்லம் தருகிறாள் தந்தையோ சுதந்திரம் தருவார்
ஒரு மனிதனுக்கு தாயும் தந்தையும் இரு கண்கள் போல்
சிலர் திருமணத்திற்க்கு பின் கண்களை மறக்கின்றனர்
சிலர் இக்கண்களையே பழிக்கின்றனர் மறுக்கின்றனர்
ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து ஆளாவது லேசானதல்ல
சேய் பிரிந்தாலும தாய்க்கு, வாழ்க்கையின் இறுதிவரை
கை மட்டுமின்றி தோளும் கொடுத்துக் காப்பவர் தந்தை
உலக வாழ்க்கை என்பது மனிதன்பிறந்து மடியும் சந்தை
இந்தச் சந்தையில் தந்தை என்பவர் மிகப்பெரிய விந்தை