மதியில் ஓர் மதி
மதியில் ஓர் மதி
முழுமதி தன்னை.. நிழற்மதி மறைக்க..!!
எழிற்மதி எண்ணம்..
இடர் மதி தருமாம்..!!
கடற்மதி காற்றாய்..
வான்மதி மகளாய்..
நிலமதி நாட்கள்..
நிறைமதி நிரம்ப..!!
சுடர் மதி நானும்..
படர் மதி படரும்..
தளிர் மதி தருணம்..
என் மலர்மதி மகிழ..!!
சிலர் மதி மயங்க..
பலர் மதி வியங்க..
கவிமதி தன்னை..
புவிமதி சேர்த்தேன்..!!
மகிழ்மதி வாழ்க்கை..
புகழ்மதி பூக்க..
கலைமதி களிப்பு.. நிலைமதி கொள்ள..
என் மதி உன்னில் நிம்மதி நிலைக்க..
கண்மதி கடவுள்
என்றும் உன் மதி நிற்க பிரார்த்திக்கிறேன்..
இங்ஙனம்
என் குணமதிக்கு..
உன் இனைமதி😘