அந்த ஒரு நிமிடம்

அதோ...
அந்த கூட்டத்தில்
எத்தனையோ ஜோடி கண்களை
என் ஜோடி கண்கள் பார்த்தது...
எத்தனையோ ஜோடி கண்கள்
என் ஜோடி கண்களை பார்த்தது...
ஒரேயொரு ஜோடி கண்களை
என் ஜோடி கண்கள் பார்த்தபோது
அந்த ஒரு நொடியில்
என்னுள்ளே ஏற்பட்டதே
ஒரு ரசாயன மாற்றம்...
ஓ...
அது ஓர் இன்ப அதிர்ச்சியா?
இல்லை பனியின் குளிர்ச்சியா?
புரியாமல் தவித்துப்போய்
தடுமாறி சிலையாய் நின்றேன்.
அதன் தாக்கத்தால்
தாகத்தால் என் நா வறண்டு போனது...
மோகத்தால் மனம் புரண்டு போனது.
சில்லிட்ட என் மேனி
மெல்ல மெல்ல சூடாகி
என் ஆத்துமாவை பொசுக்கியதே...
அந்த ஒரு நிமிடம்....

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Jun-23, 8:05 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : antha oru nimidam
பார்வை : 127

மேலே