தித்திக்கும் இதழினில் தேனும்

நித்திரை கலைந்தது
---இரவு வானம்
சித்திரமாய் சிவந்தது
---உதய வானம்
புத்தகமாய் விரிந்தது
---பூக்களின் தோட்டம்
புத்தெழில் காலையில்
---பறவைகளின் கானம்
முத்திரை பசும்பொன்
----மேனியில்இளங்
கதிர்தழுவ
தித்திக்கும் இதழினில்
----தேனும் ததும்ப
முத்துப் புன்னகை
---சிந்திவந்தாய் ஓவியமாய்
நீ