காதல் பிச்சை
விழித்திருக்கும் போது விடாது
துரத்தும் அவள் நினைவுகள்
துயில் கொண்ட நேரத்திலும்
உறங்காத உள்ளம் தட்டி
எழுப்பிய வேளையிலும் வாட்டி
வதைக்கிறது அவள் உருவம் !
மறந்திட நினைத்தவனை
மறுத்த மனம் வெறுத்து
ஒதுக்கியவளை மீண்டும் மீண்டும் கண் முன்னே நிறுத்துகிறது !
காற்றில் வந்த அவளிள் வாசம்
காதில் ஒலிக்கும் கொலுசின் சத்தம் சங்க நாதமாக கேட்க
சாய்ந்து கிடந்தவனை எழுந்து பார்க்க லைத்தது !
ஏமாந்து போனேன் ஏற்கனவே
ஏமாற்றம் அடைந்தவன்
ஊமையாக இருந்த உள்ளம்
ஏளனமாக சிரித்தது
எனது இதயத் துடிப்பு இருகரம் தட்டி ரசித்தது போல இருந்தது
வலித்த நெஞ்சம் வழிகாட்ட
களைப்பை களைந்து அவளைக் காண மூச்சிரைக்க ஓடினேன்
அவளிடம் காதல் பிச்சை கேட்க !
ஏற்பாளா , மறுப்பாளா ?
கன்னியவள் மன்னித்து
கரம் பற்றுவாளா ?
தவிக்கிறது நெஞ்சம்
அதிகரிக்கும் ஆவலால்
ஆவியும் துடிக்கிறது....!
பழனி குமார்
21.06.2023