ஊடலில் பிரிந்தவளுக்கு காதலன் விடும் தூதுமடல்
ஊடலில் எனைவிட்டு பிரிந்து சென்றாய்
வாடுகின்றேன் பிரிவில் ப்ரியமானவளே கொஞ்சம்
நான்சொல்வதை ஏற்பாய் என்றே இந்த
செய்தியைக் கவிதையாய் அனுப்புகிறேன்
கொஞ்சம் வாழ்க்கையின் அனுபவங்களைத் தான்
திரும்பிப்பார் உனக்கே புரியும் உன்நூடல்
நான் உனக்கு தந்ததை எல்லாம்
நினைக்காமல் உனக்கேனான் தர மறுத்ததை
நினைத்துப் பார் .....அவை உனக்கு உகந்ததல்ல
என்றே தர மறுத்தேன் தவிர்த்தேன்
இதை அறிந்திடுவாய்....யோசித்து மீண்டும்
திரும்பிவா உனக்காகவே காத்திருப்பேன் நான்
என்றும்போல் இன்றும் உந்தன் அன்புக்காதலன்