இணையத்தின் இதய நிலவே
இணையத்தின் இதய நிலவே
××××××××××××××××××××××××××
சோலைப் பூவொன்று
சேலை கட்டி
சிலையான நிலவொன்றை
காலைவேளை கைப்பேசி - திரைச்
சீலையில் கண்டேனே
கைலைத்துறவி நானுமே..
வலைதளத்திலே வளைக்க
வலையுள் சிக்கிடவே
அலைமோதி கரைகின்ற
அலைகடல் கரையாக
மலையெனை அரித்தாயே
கலைமகள் தேவதையே
ஓலைச்சுவடி செந்தமிழை
வலைச் சொற்களாக்கி
பாலை நிலமானயெனை
மாலைப் பொழிவாக்கியவளே..
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்