நினைவில் நின்றவளே

நினைவில் நின்றவளே
///////////////\\\

அச்சுவெல்ல பேச்சாலே
அச்சானாய் உள்ளத்திலே/
அச்சுமுறிந்த வண்டியாக
அசைவின்றி நானிருக்க/

ரசிக்கும் நிலவுக்குள்
ரசிகை உன்முகமே/
சுவாசிக்கும் காற்றும்
சுமக்கும் வாயுநீ/

கண்டிடும் கலைமிகு
கனவின் நாயகியும்/
கண்திறக்க காண்பதெல்லாம்
கற்பனையில் நீயே/

ஒளிதரும் மெழுகுகாக
ஒழுகியே கரைகிறேன்/
துளியும் மறக்காது
துன்பத்தில் துவழ்கிறனே/

உச்சி முதல்
உடலோடு கலந்தவளே/
நிச்சியார்த்தம் உன்னோடுதான்
நினைவில் நின்றவளே/

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (22-Jun-23, 4:26 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 66

மேலே