தேடல்
வாழ்வில் நாம் தேடுவது
யாவும் கிடைப்பதில்லை
ஆனா...
நாம் தொடர்ந்து
தேடிக் கொண்டேதான்
இருக்கின்றோம்
வாழ்வில் தேடல் என்பதுதான்
முயற்சியின் பயிற்சி
தேடலில் அன்பும் பண்பும்
முதலிடம் பெற்றால் சிறப்பு
நியாயமான தேடல்களில்
துன்பத்தின் நிழல்
உன்னை தொடர்வதில்லை
நம்மை தேடி வந்தவை யாவும்
நம்மோடு நிலைப்பதில்லை
இந்த உண்மையை
புரிந்துக் கொண்டால்
ஏமாற்றமின்றி ஏற்றம் மிகுந்த
வாழ்வு உன்னை தொடரும்
இருப்பதை விடுத்து
பறப்பதை தேடி சென்று
பிடித்திட நினைத்தால்
என்றும் துன்பமே...!!
--கோவை சுபா