கண்ணன் கீதம்
மாதவத்தோன் நான்முகனும் சிவனும் போற்றும்
மாலவன் இவன்தான் என்றும் யாரும்
அறியாது மாயனாய் ஆயர்ச்சிறுவனாய் அவனியில்
அவதரித்தான் கண்ணன் என்ற நாமம்பெற்றான்
துட்டரை எல்லாம் வேரோடு வீழ்த்தி
பூமியின் பாரம் குறைத்து நல்லோரை
இனிதே வாழ வழிவகுத்து தந்தான்
கீதையாம் இனிய உபநிடதம் சாரம் தந்து