உறவும், நட்பும்

கோபக் கனலில்
கொதிக்கும் உள்ளம்
கொப்பளிக்கும் உணர்வால்
கொட்டப்படும் சொற்கள்

வெக்கை வார்த்தைகளால்
உள்ளம் துடிக்கும்
வலியும் காணும்—பிறருக்கு
வேதனையும் தரும்

பிரித்து பார்த்தால்
பேதமை விரிவாகும்
பண்பும், பாசத்தோடும் பழகினால்
பலப்படும் உறவும், நட்பும்..

எழுதியவர் : கோ. கணபதி. (21-Jun-23, 8:10 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 27

மேலே